பொலிஸ் மா அதிபரை முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வழக்கில் சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காகவே பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்கிரமரட்னவுக்கு மூன்று நீதிபதிகளை கொண்ட கொழும்பு "ட்ரயல் அட் பார்" நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதியன்று மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்தும், அதனை உதாசீனம் செய்த குற்றச்சாட்டே பூஜித் ஜெயசுந்தர மீது சுமத்தப்பட்டுள்ளது.
இதே குற்றச்சாட்டு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
