சர்ச்சையை கிளப்பிய நடாஷாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நகைச்சுவை மேடைப் பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உத்தரவு இன்றைய தினம் (05.07.2023) கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்ட நடாஷா எதிரிசூரியவை, இம்மாதம் (ஜூலை) 5ஆம் திகதி வரை (இன்று வரை) விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு - கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்க்கப் போவதில்லை
இந்த நிலையில், தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடாஷா சார்பில் மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனு இன்றைய தினம் (05.07.2023) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே, இந்த பிணை உத்தரவை பிறப்பித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், பிணை கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை என தெரிவித்ததையடுத்து, இந்த பிணை உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |