தமிழ் கைதியை அச்சுறுத்திய விவகாரம்:லொஹான் ரத்வத்தவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் இரவோடு இரவாக நுழைந்த லொஹான் ரத்வத்தே விளக்கமறியலில் இருந்த தமிழ் கைதி ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் பிரதான நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிவான் நாலக்க சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், குறித்த வழக்கினை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வழக்கின் முதலாவது சாட்சியான பூபர சிங்கன் சூரியபாலன் மற்றும் இரண்டாவது சாட்சியான மணியரசன் சுலக்ஷன் ஆகியோரை அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகி வழக்கு தொடர்பான சாட்சிகளை வழங்குமாறு மேலும் உத்தரவிடப்பட்டுள்ளது.