உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களில் 62 பேரை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கோவிட் தொற்று அச்சம் காரணமாக குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனைவரும் சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் இன்று விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
