சுகாதார ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு! - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அரசாங்க தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னபிரிய ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று வழக்குத் தாக்கல் செய்தார்.
அரசாங்க தாதியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு சட்டமா அதிபர் நீதிமன்றத்திடம் தடை உத்தரவை கோரியிருந்தார்.
தொழிற்சங்க நடவடிக்கையின் விளைவாக நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமையினால் வைத்தியசாலைகளில் தற்போது நிலவும் மோசமான நிலைமைகள் குறித்து நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் தெரிவித்ததையடுத்து இந்த தடை உத்தரவு கோரப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நோயாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தொழிற்சங்கத்தின் தொழிற்சங்கப் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்வதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அருண அலுத்கே இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்தார்.



