யோஷித ராஜபக்ச வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Rajapaksa Family Yoshitha Rajapaksa Law and Order
By Aanadhi Jun 03, 2026 12:59 PM GMT
Report

புதிய இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷிதா ராஜபக்ச தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட சதிக்குற்றச்சாட்டுகளை மேற்கொண்டு விசாரணைக்குட்படுத்த முடியும் என கொழும்பு மேல்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, யோஷிதா ராஜபக்ச மறுசீராய்வு மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதற்கமைய, இன்று(03.06.2026) மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் குறித்த மனு விரிவாகப் பரிசீலிக்கப்பட்ட பின்னர், அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள உத்தரவிட்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அதற்கான திகதியை நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

யோஷித ராஜபக்ச வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! | Court Of Appeal Orders Action In Yoshitha Case

இதன்படி, யோஷிதவின் மறுசீராய்வு மனு எதிர்வரும் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மனு பரிசீலிக்கப்பட்டபோது மனுதாரர் யோஷிதா ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். 

முதலாம் இணைப்பு

உயர் நீதிமன்ற நீதிபதியொருவரை வழக்கு விசாரணையொன்றின் சாட்சியாக அழைப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், சட்டமா அதிபர் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்த வழக்கொன்றின் விசாரணை தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய திறைசேரி அதிகாரியின் மரணம்! உயிர்மாய்ப்பென இறுதி முடிவு

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய திறைசேரி அதிகாரியின் மரணம்! உயிர்மாய்ப்பென இறுதி முடிவு

குறித்த வழக்கு ஆரம்பத்தில் நுகேகொட மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டிருந்தது.

இதன்போது, குறித்த நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய சஹன் மாபா பண்டார பிறப்பித்த ஓர் உத்தரவு குறித்து விசாரணை செய்வதற்காக, அவரை குறித்த வழக்கில் சாட்சியமளிக்க அழைப்பாணை அனுப்ப அரசாங்கத் தரப்பு முடிவு செய்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

யோஷித ராஜபக்ச வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! | Court Of Appeal Orders Action In Yoshitha Case

இதன்படி, தற்போதைக்கு அவிசாவளை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றும் சஹன் மாபா பண்டாரவுக்கு, குறித்த வழக்கின் சாட்சியாக முன்னிலையாகுமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இடைக்கால உத்தரவு பிறக்குமாறு உத்தரவு

ஜனாதிபதி சட்டத்தரணிகளான உதிதா இகலஹேவா, ஃபர்மான் காசிம் ஆகியோருடன் சட்டத்தரணி சுகத் கல்தேரா ஆகியோர் கொழும்பு மேல்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துச் செய்யுமாறும், நீதிபதி சஹன் மாபா பண்டாரவை வழக்கொன்றின் சாட்சியாக அழைக்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஒரு நீதிபதி ஆற்றிய உத்தியோகபூர்வ கடமை குறித்து சாட்சியமளிக்க அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அது நீதித்துறையின் சுதந்திரத்திலும் சட்டத்தின் ஆட்சியிலும் பாதகமான விளைவை ஏற்படுத்தும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன்படி, சம்பந்தப்பட்ட நீதிபதியை சாட்சியமளிக்க அழைப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையைச் செல்லாததாக்கவும், இந்த மனுவின் விசாரணை முடியும் வரை அந்த அழைப்பாணையின் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கவும் மனுதாரர்கள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.

யோஷித ராஜபக்ச வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! | Court Of Appeal Orders Action In Yoshitha Case

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன்பாக இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மனுதாரர்களின் வாதங்களைக் கருத்திற்கொண்டு, அவிசாவளை உயர் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டாரவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையின் மீது மேலும் நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த மனு ஜூன் 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.   

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் மற்றுமொரு திருப்பம்! சிஐடியினருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் மற்றுமொரு திருப்பம்! சிஐடியினருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை! இலங்கை பெண்ணுடன் சென்ற சிறுமியும் உயிரிழப்பு

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை! இலங்கை பெண்ணுடன் சென்ற சிறுமியும் உயிரிழப்பு


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US