சிறுமியை வன்புணர்வு செய்த நபர் அடித்துக்கொலை: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழில் 9 வயது சிறுமியை வன்புணர்வு செய்த நபர் ஒருவரை அடித்துக்கொன்ற 6 சந்தேகநபர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை (12.08.2023) நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் அடித்து கொலை செய்யப்படுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
09 வயதான சிறுமி ஒருவரிடம் சடலமாக மீட்கப்பட்டநபர் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தே குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வன்புணர்வு செய்யப்பட்டமை உறுதி
சிறுமியின் தாய் உள்ளிட்ட உறவினர்களே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியின் தாய் உள்ளிட்ட 6 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
உயிரிழந்த நபர் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தாக்குதல் சம்பவத்தினால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிரிந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியிடமும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்கள் மற்றும் சிறுமியும் இன்று (14.08.2023) யாழ் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்கள் 6 பேரையும் எதிர்வரும் 24 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன் குறித்த சிறுமியை தந்தையுடன் செல்ல நீதவான் அனுமதித்துள்ளார்.
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri