ஒலிப்பெருக்கியின் மூலம் தொந்தரவு ஏற்படுத்திய தேரர்!: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கிருலப்பனை - பொல்ஹேன்கொட அலன் மெத்தினியாராம விகாரையின் பிக்குவான உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.
ஒலிப்பெருக்கியின் மூலம் தொந்தரவு ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட தனி ஆள் மனுவொன்றின் அடிப்படையில் இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒலி மாசு

காலை ஐந்து மணி முதல் ஆறு மணிவரையிலான காலப்பகுதிக்குள் ஒலிப்பெருக்கியை பயன்படுத்தியதன் காரணமாக தொந்தரவு ஏற்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட மற்றும் சுற்றாடல் நீதி மையம் உள்ளிட்ட ஆறு தரப்பினர் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.
எனினும் பிரதிவாதியான உடுவே தம்மாலோக்க தேரர் மன்றில் முன்னிலையாகவில்லை.
மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 98வது பிரிவின்படி, இப்பகுதியில் ஒலி மாசு ஏற்படுவதைத் தடுக்க, ஆறு புகார்தாரர்களும் இந்த தனிப்பட்ட வழக்கின் மூலம் நீதிமன்றத்தினை நாடியிருந்தனர்.
நீதிமன்றம்
அலன் மதினியாராமயவில் உள்ள ஒலிபெருக்கிகளில் இருந்து வெளிவரும் ஒலிகளை தங்கள் விருப்பத்திற்கு மாறாக கேட்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக ஆறு முறைப்பாடுதாரர்களான கவிந்த ஜயசிங்க, கலாநிதி கலிங்க களுபெரும, டிரென் ஆர். ஹலோக், மிலிந்த மொரகொட, கமலேஷ் ஜோன்பிள்ளை மற்றும் சுற்றாடல் நீதிக்கான நிலையம் ஆகிய 6 பேர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
விகாரையில் பல தடவைகள் தாம் செய்த முறைப்பாடுகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri