பெத்தும் கர்ணரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம்
நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சுற்று வட்டப் பகுதியில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது மோதலான நிலைமையை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தின் சந்தேக நபர்களில் ஒருவரான விசேட மருத்துவ நிபுணர் பெத்தும் கர்ணரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ஹர்சன கெக்குலாவல இன்று இந்த உத்தரவை பிறப்பித்ததுடன் பிடியாணையும் பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலையாகாத பெத்தும் கர்ணர்

சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சந்தேக நபரான பெத்தும் கர்ணர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பதால், நீதவான் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என முறைப்பாட்டாளர்கள் தரப்பில் முன்னிலையான கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri