நாடாளுமன்றத்தை பாதுகாக்குமாறு ரணில் படைத்தரப்புக்கு உத்தரவு
நாடாளுமன்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படும் போராட்டக்காரர்களிடமிருந்து நாடாளுமன்றத்தை பாதுகாக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு முன்னால் முன்னேறும் போராட்டக்காரர்களை அடக்குவது தொடர்பில் பலத்தை பயன்படுத்துவதற்கு, பாதுகாப்புப் படைத் தளபதிகள், இன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது,கட்சித் தலைவர்களிடம் அனுமதியை கோரியுள்ளனர்.
பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவு
எனினும் கட்சித் தலைவர்களிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை.பதிலாக அரசாங்கத்திடம் இருந்து உத்தரவுகளைப் பெறுமாறு கூறப்பட்டுள்ளது.
இதன்போதே தளபதிகள், ரணில் விக்ரமசிங்கவிடம் இதற்கான அனுமதியை கோரியுள்ளனர்.
இதன் அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படும்
போராட்டக்காரர்களிடமிருந்து நாடாளுமன்றத்தை பாதுகாக்குமாறு ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
