கொழும்பில் கைவிடப்பட்ட கிரிஷ் கட்டிடம் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு
கொழும்பு(Colombo) கோட்டையில்(Fort) கட்டப்பட்டு கைவிடப்பட்ட கிரிஷ் (Krish - The One Transworks) கட்டிடத்தின் ஆபத்தான பாகங்களை இரண்டு வாரங்களுக்குள் உடனடியாக அகற்றுமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி பணிப்பாளர் சபைக்கு கட்டளையிட்டுள்ளார்.
இந்த அகற்றல் வேலைத்திட்டம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் இடம்பெற வேண்டும் எனவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இதன்போது கட்டிடத்தின் எந்த ஒரு பொருளும் இடிந்து விழாமல் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரச பொறியியல் கூட்டுத்தாபனம்
இந்நிலையில், 55 நாட்களுக்குள் அவற்றினை அகற்றுவதற்கான வேலைத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த அகற்றல் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலையீட்டிற்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
