இலங்கையில் நான்கு பேருக்கு மரண தண்டனை
இலங்கையில் படுகொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நான்கு பேருக்கு களுத்துறை மேல் நீதிமன்றதினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கூரிய ஆயுதங்களைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது என நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி களுத்துறை மதினகந்த பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
மரண தண்டனை விதிப்பு
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏழு பேருக்கு எதிராக சட்டமா அதிபர், களுத்துறை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் முதலாம் இரண்டாம் மூன்றாம் மற்றும் ஐந்தாம் பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மேலும் வழக்கின் 6ஆம் மற்றும் பிரதி7ஆம் பிரதிவாதிகள் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் நான்காவது பிரதிவாதி வழக்கு விசாரணைகளின் போது உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
