நளினி மற்றும் ரவிச்சந்திரன் விடுதலையை தமிழக அரசு எதிர்ப்பது கண்டனத்திற்குரியது:சீமான்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலைக்கு எதிராக தமிழக அரசாங்கம், நீதிமன்றத்தில் முன்வைத்த வாதம் ஏற்க முடியாத பச்சைத்துரோகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சீமான் இதனை கூறியுள்ளார்.
நளினி, ரவிச்சந்திரன் விடுதலைக்கு எதிரான திமுக அரசின் நீதிமன்ற நிலைப்பாடு, ஏற்கவே முடியாத பச்சைத்துரோகம்! https://t.co/QFMFmkwjNJ @CMOTamilnadu | @mkstalin #Release6Tamils pic.twitter.com/ZqM2jIHnlY
— சீமான் (@SeemanOfficial) June 19, 2022
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கியுள்ள நளினி மற்றும் ரவிச்சந்திர ஆகியோர் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தமிழக அரசு முன்வைத்த வாதம் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பேரறிவாளன் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற வழக்கில்,மாநில ஆளுநர் மாநில அரசாங்கத்தின் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் எனவும் இந்த விடுதலையில் இந்திய ஜனாதிபதியோ, ஒன்றிய அரசாங்கமோ முடிவுகளை எடுக்க அதிகாரமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி தெளிவுப்படுத்தியுள்ள நிலையில், அந்த தீர்ப்புக்கு முரணாகவும் விடுதலையை எதிர்த்தும் தமிழக அரசாங்கம் வாதிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.