முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்து செய்யும் சட்ட மூலத்திற்கு எதிராக மனு
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்து செய்யும் சட்ட மூலத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையை ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதிகளிளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் வகையில் சட்டமூலமொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் அதிகாரபூர்வ இல்லம், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புரிமைகளை வரையறுக்கும் நோக்கில் இந்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சட்ட மூலத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் மக்களின் பணத்தை விரயம் செய்வதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.
இதன் அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ள உத்தேச சட்டமூலத்தை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



