லொஹான் ரத்வத்தவின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு
பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் தொடர்பான வழக்கில், விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் (Lohan Ratwatte) உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த உத்தரவை இன்று (19) பிறப்பித்துள்ளது.
லொஹான் ரத்வத்த தற்போது கொழும்பு பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால நிவாரணம்
இந்தநிலையில் இன்று லொஹான் ரத்வத்த சார்பில் முன்னிலையான, முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், இடைக்கால நிவாரணத்தை கோரினார்.
எவ்வாறாயினும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான, பிரதி மன்றாடியார் நாயகம் சனில் குலரத்ன ஆட்சேபனைகளை முன்வைத்து, இந்த மனுவுக்கு எதிராக வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அனுமதி வேண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் இரண்டு தரப்பு வாதவிவாதங்களை பரிசீலித்த நீதிமன்றம் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை நவம்பர் 29ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.
இதன்படி, இந்த நீதிப்பேராணை மனுவின் அமர்வு, 2024 டிசம்பர் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் தொடர்பான, வழக்கு தொடர்பில் தன்னை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரி லொஹான் ரத்வத்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
