ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக வழக்கு தாக்கல்
சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி ஷான் ரணசூரியவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பை வேண்டுமென்றே அவர் மீறியுள்ளமையினால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இடைகால தடையுத்தரவு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் கட்டுபணம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு இடைகால தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பின் 30(1) சரத்தின் கீழ் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார் எனவும் அவர் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 107(7) பிரிவிற்கமைய, உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரம்
எனினும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உச்ச நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு வழங்குவதற்கு ஜனாதிபதியின் நியமனம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அந்த உத்தரவு அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்தைப் பெறாததால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான இரண்டு வெற்றிடங்களும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஐந்து வெற்றிடங்களும் ஏற்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
