திருகோணமலையில் தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி: சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை
திருகோணமலையில் தம்பதி ஒன்றை மிரட்டி, அவர்களின் கார், பணம் மற்றும் நகைகளை கும்பல் ஒன்று திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவம் சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள மான்களை பார்வையிடும் பகுதியில் வைத்து நேற்று இடம்பெற்றுள்ளது.
நேற்று மதியம் காரில் வந்த மூன்று நபர்களால் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவர் கைது
சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸாரினால் நடத்தப்பட்ட விசாரணையில், கிண்ணியா பாலத்திற்கு அருகில் இரண்டு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் திருகோணமலை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
திருடப்பட்ட கார், கொள்ளையர்கள் வந்த கார் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவத்தில் தொடர்புடைய மற்ற சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan