மீண்டும் தமிழீழம் மலரும் இரத்த ஆறு ஓடும்! விமல் வீரவன்ச சீற்றம்
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபட்டு தமிழீழம் மலர வழிவகுக்கும், நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்திருந்த நிலையில் அக்கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் வினவிய போதே உத்தர லங்கா சபாவவின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார்.
13ஆவது திருத்தத்தம்
அவர் மேலும் தெரிவிக்கையில், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதால் நாடு பிளவுபடாது. எனவே இந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
அப்படிச் செய்யாமல் இருக்கவேண்டுமானால் யாராவது நாடாளுமன்றத்தில் 22ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும் என்று சர்வகட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
நாடு பிளவுபடும்
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபட்டே தீரும். அது தமிழீழம் மலர வழிவகுக்கும். நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும்.
இப்படியான நிலைமை ஏற்படக்கூடும் என்று ஜனாதிபதிக்கும் தெரியும். 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
இதைப் பல தடவைகள் நாம் தெரிவித்து விட்டோம். தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற மமதையுடன் ஒவ்வொரு நாளும் வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
மக்களை ஏமாற்றும் நோக்கில் ஜனாதிபதி
சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் ஏமாற்றும் நோக்குடனேயே ஜனாதிபதி செயற்படுகின்றார்.
ஆனால், சிங்கள மக்கள் எப்போதும் விழிப்பாகவே இருக்கின்றார்கள்.
ஜனாதிபதி நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இப்படியான கருத்துக்களை வெளியிட்டுத்
தனது பதவிக் காலத்தை இழுத்தடிப்பார் என்று தெரிந்துதான் அவரின் சர்வகட்சிக்
கூட்டத்தை நாம் புறக்கணித்தோம் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

102 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை விற்கும் பிரித்தானிய பெண்! காரணம் கூறும் 104 வயது மூதாட்டி News Lankasri

100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரப்போகிறது... நாம் முன்வரிசையில்: விளாடிமிர் புடினுக்கு உறுதி அளித்த சீன ஜனாதிபதி News Lankasri
