நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க முடியாது: ஞானமுத்து சிறிநேசன்(Video)
ஊழல் தலைவிரித்தாடுகிறது நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டு ஊடக அமையத்தில் இன்று(08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், “நாளைய தினம் மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் கொழும்பில் இடம்பெற உள்ளது இந்த போராட்டமானது சிங்கள மக்களை பொருத்தளவில் முக்கிய போராட்டமாக அமைய இருக்கிறது.
கோட்டா கோ கம போராட்டம் 90 நாட்களை கடந்து விட்ட நிலையில் தற்பொழுது அந்த போராட்டத்தினை வலியுறுத்த கூடிய வகையில் பல தரப்பினர் அந்த போராட்ட களத்தில் குவிந்து இருக்கின்றார்கள்.
மகாநாயக்க தேரர்கள் கூறுகின்ற முக்கியமான விடயம் என்னவென்றால் தங்களால் தான் இந்த ஆட்சி அமைக்கப்பட்டது என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டிருந்தார் இப்பொழுது தாங்களே இந்த ஆட்சி வெறுப்பதாக கூறியிருக்கின்றார்கள்.
மகாநாயக்க தேரர்கள் சத்தியாகிரக போராட்டத்தில் இறங்கி இருக்கின்றார்கள். நாளைய போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்த போராட்டமானது பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.
ஊழல்
நீதிமன்றத்தில் இந்த போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை முற்றுகை இடுகின்ற அந்த போக்கினை கட்டுப்படுத்துவதற்காக நீதிமன்றம் சென்று தடை உத்தரவு கேட்டு இருக்கின்றார்கள். ஆனால் நீதிமன்றம் அந்த உத்தரவை வழங்கவில்லை.
எமது ரூபாயில் பெறுமதி மிகவும் ஒரு கீழ் மட்டத்திற்கு இறங்கியிருக்கின்றது. வரலாற்றிலேயே இதுதான் முதல் தடவையாக மோசமான பணவீக்கம் என சொல்லப்படுகிறது.
நாட்டிற்கு தேவையானவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றபோது, அதிலும் தரகு பெறுகின்ற ஒரு நிலைமை இருக்கின்றமையால், இந்த நாடு உருப்படுதற்குரிய வாய்ப்பு இல்லை.
ஊழல் தலைவிரித்தாடுகிறது
நாட்டை பொருளாதார பின்தள்ளுகையில் இருந்து நாங்கள் மீட்க முடியாது என்பது தான்
உண்மையான விடயம்” என கூறியுள்ளார்.