நாடு மீண்டும் பாரிய சவாலை எதிர்கொள்ளும் : ருவான் விஜேவர்தன பகிரங்கம்
நாடாளுமன்றத்தை பலவந்தமாக கைப்பற்ற முயற்சித்த குழுவொன்று அதனைக் கைப்பற்றுவதற்கான போட்டியில் இறங்கியுள்ள நிலையில், எதிர்பாராத சவால்களை இலங்கை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனநாயக முன்னணி வேட்பாளருமான ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.
தெல்கொடவில் (Delgoda) நேற்று (06) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய விஜேவர்தன, நாடாளுமன்ற பாரம்பரியம் மற்றும் கலாசாரம் பற்றி அறியாதவர்கள் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவது நாட்டை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளும்.
அரசியலி்ல் அமைதி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் கடினமான சூழ்நிலையின் போது இந்த நாட்டு மக்களுக்குத் தேவைப்படுவதால் அவர் நீண்ட காலம் அரசியலி்ல் அமைதியாக இருக்க முடியாது.

இந்நிலையில், எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அனுபவம் வாய்ந்த குழு ஒன்று சபைக்குள் வர வேண்டும் என்றும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 20 மணி நேரம் முன்
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri