நாட்டின் முக்கிய கோவிட் கொத்தணிகள் குறைந்து வரும் நிலையில் உள்ளன - ஹேமந்த ஹேரத்
தற்போது நாட்டில் கோவிட் தொற்றுக்கள் சிறிதளவு குறைந்து வருகின்றன.எனினும் அது குறித்து கருத்து தெரிவிப்பது மிக விரைவானது என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், நாட்டின் முக்கிய கொத்தணிகள் குறைந்து வரும் நிலையில் உள்ளன.எனவே தான் கோவிட் தொற்றுக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்று கருதமுடியும் என்று சுகாதார சேவைகள் துணைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த வகை ஏற்ற இறக்கங்கள் மிகவும் வெளிப்படையானவை. இது தொற்று நோயியல் ரீதியாகவும் நிகழக்கூடும். எனினும் இது தொடர்பில் முன்கூட்டியே கருத்துக் கூற முடியாது என்று ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோவிட்டை கட்டுப்படுத்த முடிந்தவரை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அதற்காக, மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம் என்று ஹேமந்த தெரிவித்துள்ளார்.





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
