செல்வந்த நாட்டை உருவாக்க வந்தவர்களினால் நாடு ஏழையாகியுள்ளது
செல்வந்த நாட்டை உருவாக்க வந்த தரப்பினரின் செயற்பாடுகளினால் நாடு ஏழையாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய பொருளாதார நடைமுறைகள் மூலம் "செல்வந்த நாடு" ஒன்றை உருவாக்குவதற்குப் பதிலாக, மக்களைத் தொடர்ந்து வறுமையிலேயே வைத்திருக்கும் சூழ்நிலையே உருவாகி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு 600 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ள பின்னணியில், நாட்டின் பொருளாதார நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி கருத்து ஹர்ஷ டி சில்வா கருத்து வெளியிட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சி இவ்வாறு மந்தமடைவதற்கு முக்கிய காரணம், சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் தளர்த்தப்படாமையே ஆகும் எனச் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டுமானால், பழைய குறுகிய மனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டும் எனவும், அதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட "புளூபிரின்ட்" திட்டத்திலுள்ள உத்திகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசாங்க கடன் முகாமைத்துவ மற்றும் நிதி ஒழுக்கத்தன்மை காரணமாக நாட்டில் ஓரளவுக்கு ஸ்திரத்தன்மை ஏற்பட்டது என்பதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கத்தால் அந்த ஸ்திரத்தன்மையை மாத்திரம் வைத்துக்கொண்டு நன்மதிப்பினை பெற முடியாது என்றும் கூறினார்.
தற்போது வறுமையில் வாடும் மக்களை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமானால், பொருளாதாரம் மிக அதிவேகமாக வளர்ச்சியடைய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய திட்டங்களின் ஊடாக "செல்வந்த நாட்டை உருவாக்குவோம்" எனக் கூறிக்கொண்டு, மக்களின் துயர நிலையை மேலும் நீடிப்பதே நடக்கிறது எனவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..! 15 மணி நேரம் முன்
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam