கொழும்பில் போலியாக பொருட்களை விற்பனை செய்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் தண்டனை
கொழும்பில், போலியான பண்டக்குறி மற்றும் வியாபார சின்னங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நிறுவனமொன்றுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
நுகர்வோரை ஏமாற்றும் வகையில் போலியான அடிப்படையில் பண்டக்குறி மற்றும் வியாபார சின்னங்களை பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்துள்ளதாக இந்த நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குளியலறை உபகரணங்கள், நீர்க்குழாய் உதிரிப்பாகங்கள் என்பன இவ்வாறு மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவு
முன்னணி பண்டக்குறிகளைக் கொண்ட உற்பத்திகள் என்ற போர்வையில் போலி உற்பத்திகளை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போலி உற்பத்திகளில் பிரபல வியாபார சின்னங்கள் மற்றும் பண்டக்குறி பெயர்கள் பொறிக்கப்பட்டு நுகர்வோர் ஏமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம், குறித்த போலி நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தில் காணப்பட்ட சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை அழிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |