போலி மனித இம்யூனோகுளோபுலின் : நான்கு சுகாதார அமைச்சின் பணியாளர்கள் மீது விசாரணை
பதிவு செய்யப்படாத உள்ளூர் நிறுவனத்திடமிருந்து போலி மனித இம்யூனோகுளோபுலின் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பாக ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நான்கு சுகாதார அமைச்சின் பணியாளர்களை கைதுசெய்து விசாரித்து வருகிdறது.
ஆனால் Isolez biotech pharma AG இலிருந்து Rituximab மற்றும் Irinotecan என்ற புற்றுநோய்க்கான மேலும் இரண்டு மருந்துகளை வாங்குவதற்கு அங்கீகாரம் அளித்த ஆவணத்தில் கையெழுத்திட்ட மூத்த அதிகாரிகளுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
மேலதிக விசாரணைகள்
இதில் இம்யூனோகுளோபுலின் மற்றும் ரிட்டுக்சிமாப் ஆகியவற்றிற்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை போலி மனித இம்யூனோகுளோபுலின் கொள்முதல் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை (20.11.2023) கைது செய்யப்பட்ட, மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் கபில விக்கிரமநாயக்க, கணக்காளர் (விநியோகம்) நிரன் தனஞ்சய, உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.டி. சாந்தினி சொலமன் மற்றும் களஞ்சிய முகாமையாளர் சுஜித் குமார ஆகியோர் நவம்பர் 29 வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள்.
ஐசோலெஸ் உரிமையாளர் ஹேவகே சுதத் ஜானக பெர்னாண்டோவும் விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
காலையில் உண்ணாவிரதத்தில் இருந்து மதியம் மீன் சந்தையில் நின்ற தலைவர் : சிவாஜிலிங்கம் விடுத்துள்ள சவால்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |