வாக்குகளை மீண்டும் எண்ணுங்கள்! முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு
அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அத்தாவுல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அத்தாவுல்லா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.
கோரிக்கை
கல்முனையில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் அவர் தமது முறைப்பாட்டை நேற்று(10.12.2024) முன்வைத்துள்ளார்.
இதன்போது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை கவனத்திற் கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
