முஸ்லிம்களுக்கு இவை கிடைக்குமாயின் மாகாணசபைகள் அவசியமில்லை! - அதாவுல்லா
முஸ்லிம் மக்களுக்கு, தேவையான தொழில் வாய்ப்புகள் மற்றும் ஏனைய வசதிகள் கிடைக்குமாயின் மாகாண சபைகள் அவசியமில்லை என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லா, நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் நடைபெற்ற 12 கட்சிகளில் கூட்டத்தின் போதே இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் 12 கட்சிகளின் பிரதிநிதிகள் மாத்திரமின்றி, பௌத்த பிக்குகளும் கலந்துக்கொண்டிருந்தனர்.
இவர்களின் முன்னிலையிலேயே அதாவுல்லா, மாகாண சபைகள் தொடர்பான தனது இந்த நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாணசபைகள் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
எனினும் மற்றைய சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் இந்த மாகாணசபை முறையின் மூலம் பதவிகளையும் சிறப்புரிமைகளையும் பெற்று வந்துள்ளனர் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
