இலங்கையில் தொடரும் தமிழின அழிப்பு! பிரித்தானிய தமிழர் பேரவையின் அறிவிப்பு(Photos)
இலங்கையில் தொடரும் தமிழின அழிப்பினை ஆதாரபூர்வமாக சர்வதேச கட்டமைப்புக்களில் பதிவிடும் வேலைத்திட்டம் ஒன்றை பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பான அறிக்கையை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் அறிக்கை
இந்த அறிக்கையில், 14 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச சமூகத்தினரால் கைவிடப்பட்ட, ஈழத் தமிழர்கள் யாருமற்ற அநாதைகளாக, சிங்கள அரசினால் பல்லாயிரக்கணக்கில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை படுகொலை செய்யப்பட்டும்,சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் முள்ளிவாய்க்கால் மண்ணையும் கடலையும் செந்நிறம் ஆக்கி, மானுட வரலாற்றின் கருப்பு பக்கங்களை உருவாக்கியதனை உலகின் முன் வைத்து நீதி கோரும் குரல்களின் சங்கம தினமாகும்.
குற்றவாளிக் கூண்டில் நிற்கும் மானுட தர்மம்
இலங்கை தீவானது 1948 ஆம் ஆண்டில், பிரித்தானியாவிடம் சுதந்திரம் அடைந்த தருணத்தில் இருந்து இலங்கை அரசினால் ஆரம்பிக்கப்பட்ட, தமிழின அழிப்பானது, கடந்த 75 வருடங்களாக இடையறாது தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் தமிழ் மக்களின் மேல் கட்டவிழ்க்கப்பட்டு இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பது நவீனஉலகின் மாபெரும் அவலமாகும்.
இந்த இனப்படுகொலைகளின் உச்சமாக 2009 ஆம் ஆண்டு
மே மாதம் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ்
மக்கள் இலங்கை சிங்கள அரசினாலும் அவர்களது நட்பு சக்திகளின் துணையோடும்,
தமிழினப்படுகொலையை அரங்கேற்றியதன் மூலம், மானுட தர்மம் இன்று குற்றவாளிக்
கூண்டில் நிற்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.










ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
