அமைச்சரின் முடிவால் ஸ்ரீலங்கன் விமானங்கள் பறப்பதிலும் சிக்கல்?
பணத்தை செலுத்தினால் மாத்திரமே இனி வரும் காலங்களில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு எரிபொருளை விநியோகிப்பது என்ற கடும் முடிவுவை எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில எடுத்துள்ளார்.
எந்த மின் உற்பத்தி நிலையத்திற்காவது தேவையான எரிபொருள் கிடைக்காது போயிருந்தால், அதற்கான காரணம் பணத்தை செலுத்தாததே எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிபந்தனையின் கீழேயே இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எ
ரிசக்தி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு அவசியமான எரிபொருள் உரிய நேரத்தில் கிடைக்காது போனால், விமானங்களை இயக்குவதிலும் நெருக்கடியான நிலைமை உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தானம், ஸ்ரீலங்கன் உட்பட பல முக்கிய அரச நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக நாடாளுமன்ற கோப் குழுவின் விசாரணைகளில் தெரியவந்தது.