கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய பயிற்றுநர் கைது
கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 16 சிறுவர்களை தொடர்ச்சியாக விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியுள்ளதாக பாடசாலை அதிபர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாடு பதிவு
இதனையடுத்து கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபரை கிளிநொச்சி அறிவியல்நபர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார். மேலதிக சட்டநடவடிக்கைக்காக நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
மேலதிக தகவல் - யது
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan