12 மணி நேர நீர் வெட்டு..! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
லபுகம மற்றும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், நாளை(09.04.2026) பல பகுதிகளில் 12 மணி நேர நீர் விநியோகம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மத்இதன்படி, மட்டெகொட, பிரம்மனகம, கிரிகம்பமுனுவ, தீபங்கொட, பொலிஸ் கசோவிட்ட வீதி, குடமடுவவிலிருந்து வேல செல்லும் 342 பேருந்து வீதி மற்றும் புபுது மாவத்தவிலிருந்து வேல செல்லும் 342 பேருந்து வீதி ஆகிய பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் மையம் தெரிவித்துள்ளார்.
நீர் விநியோகம் தடை
இதேவேளை, இன்று (08.04.2026) இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை ஹோமாகம ஹைலெவல் வீதி, பிடிபன சந்தி முதல் கலகெதர, மாவத்தகம, பாதுக்க வீதி - கொடகம முதல் லியான்வல பாலம், அதுருகிரிய வீதியில் இருந்து கொடகம வரை ஹபரகட, தம்பே ஹொரகல, மதபே சொரக்கல வீதி, மத்தவுல ஹொரக்கல வீதி, மத்தவுல மாரத்வகா வீதி ஆகிய பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், அட்டிகலே வீதி, எம்புல்கம வீதி, ரணல ஹபரகட வீதி, மொரகஹஹேன வீதி, புவக்வத்த வீதி, கலகெதர, சண்டே மார்க்கெட், பின்னவல, வெவெல்பனாவ, பைகும்பே, மீபே, மாவத்தகம, பாதுக்க, உடுமுல்ல, அருக்வத்த, வெரகல, போபே, மலகல, கஹவல, மில்லவ, கொட்டியாங்கொட, பொரேகெதர, அங்கம்பிட்டிய, அங்கம்மனை, அங்கம்மனை ஆகிய பகுதிகளுக்கு இன்று(08) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.