தெற்காசியாவிலேயே சிறந்த சட்டம் விரைவில் இலங்கையில் நிறைவேற்றப்படும்! ரணில் அறிவிப்பு
தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (23.03.2023) ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வங்குரோத்து அடைந்த இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன் தொகை இன்று (23) நிதி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்காக கடுமையான கட்டுப்பாடுகளை சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ளது.
ஜனாதிபதியின் அறிவிப்பு

இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டிய சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகளில் ஒன்றே ஐக்கிய நாடுகள் சபையின் நியமங்களுக்கு அமைவாக ஊழலுக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதாகும்.
இந்நிலையிலே, ஜனாதிபதியின் மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.