இலங்கைக்கு IMF விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள்
வங்குரோத்து அடைந்த இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முதற்கட்ட கடன் தொகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
அடுத்து வரும் சில தினங்களில் கடன் தொகை கிடைக்கவுள்ள நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளை சர்வதேச நிதியம் விதித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியின் முதல் தவணையாக 333 மில்லியன் டொலர்கள் சில தினங்களில் கிடைக்கவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் அடிப்படையில் இந்த மூன்று பில்லியன் டாலர்கள் நான்கு ஆண்டுகளில் தவணைகளில் வழங்கப்படும்.
இலங்கை அமுல்படுத்த வேண்டிய சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகள் வெளியாகி உள்ளன.
- கடன் மறுசீரமைப்பு திட்டம் ஏப்ரல் இறுதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
- ஐக்கிய நாடுகள் சபையின் நியமங்களுக்கு அமைவாக ஊழலுக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்
- அரச வருவாயை மிக விரைவில் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்
- அதிக வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து அதிக பங்களிப்புடன் செல்வ வரி விதித்தல்
- 2025க்குள் சொத்து மற்றும் சொத்து பரிமாற்ற வரி அறிமுகம்
- 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் பணவீக்கத்தை 12%-18% ஆகக் குறைக்க இலக்கு
- ஜூன் மாத இறுதிக்குள் தற்போதைய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்
- நாணய மாற்று விகித நெகிழ்வுத்தன்மையை பராமரித்தல்
- மத்திய வங்கியை மேலும் சுதந்திரமாக்குதல்
- வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பை அறிமுகப்படுத்துதல்
ஆகிய கட்டுப்பாடுகள் அடங்கும்.
You may like this video

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 16 மணி நேரம் முன்

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
