தொடருந்து பாதை சீரமைப்பு பணியில் பல இலட்சம் ரூபா இரும்பு திருட்டு: அதிகாரிகள் இடைநிறுத்தம்
வடக்கு தொடருந்து பாதை சீரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் அதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான இரும்பு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தொடர்புடைய அதிகாரிகளை இடைநிறுத்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் குறிப்பிட்ட அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
மஹவ முதல் ஓமந்தை வரையான தொடருந்து பாதை அபிவிருத்திப் பணிகளின் போது பல இலட்சம் ரூபா பெறுமதியான இரும்பு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தொடருந்து திணைக்களத்தின் நான்கு அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
நான்கு அதிகாரிகளும் திட்டத்தில் உயர் பதவி
பாதை புனரமைப்புப் பணிக்காக இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தினை அந்நிறுவனம் மேலும் பல நிறுவனங்களுக்கு துணை ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.
இத்துணை ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் தொடருந்து திணைக்களத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களுடையது என தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட நான்கு அதிகாரிகளும் திட்டத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் என்றும் திருடப்பட்ட இரும்பின் தொகை மற்றும் விற்பனை செய்யப்பட்ட இடம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
இவர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் இரும்பின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 28 நிமிடங்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
