அநுர ஆட்சியில் ஊழல் அதிகாரிகளை மிரட்டி வேலை வாங்குவதே திட்டம் - கஜேந்திரகுமார் திட்டவட்டம்

Gajendrakumar Ponnambalam Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Theepan May 17, 2026 06:44 AM GMT
Report

வடகிழக்கில் ஊழல் முறைகேடுகளை செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைது செய்யாது அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில் தமது கட்சி சார்ந்தவர்களுக்கு சலுகைகள் வழங்கி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்றுமுன்தினம்(15.05.2026) தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

திடீரென அதிகரிக்கும் நீர் மட்டங்கள் - பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

திடீரென அதிகரிக்கும் நீர் மட்டங்கள் - பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

அநுர ஆட்சியில் தொடரும் ஊழல் குற்றங்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊழல் முறைகேடுகளை ஒழிக்கப் போகிறோம் என வாக்குறுதி வழங்கி வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பல முறைகேடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. தெற்கில் ஒரு சிலரை கைது செய்தாலும் வடகிழக்கிலுள்ள ஊழல் அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைது செய்யாது.

அதற்கு வலுவான காரணம் இருக்கிறது அதாவது, வடகிழக்கில் தேசிய மக்கள் சக்தி எதிர்பார்த்த மக்கள் ஆணையை வராத நிலையில் ஊழல் அதிகாரிகளை வைத்து தமது கட்சி சார்ந்தவர்களின் நலனை பாதுகாப்பதே அவர்களின் திட்டம்.

அநுர ஆட்சியில் ஊழல் அதிகாரிகளை மிரட்டி வேலை வாங்குவதே திட்டம் - கஜேந்திரகுமார் திட்டவட்டம் | Corruption Continues Under Anura S Rule

கடந்த தேர்தலில் யாழ். தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தியினர் சுமார் 80 ஆயிரம் வாக்குகளை பெற்று மூன்று ஆசனங்களை பெற்றார்கள்.

உண்மையில் கடந்த காலங்களில் அரசாங்கக் கட்சிகளுக்கு தொடர்ச்சியாக வாக்களிக்கும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் வழங்கி வந்த வாக்குகளில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் குறைவாகவே தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்தது.

தடுக்கப்படும் விசாரணை

தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை அற்றத்தன்மை கடந்த தேர்தலில் வாக்குகள் சிதறடிக்கப்பட்டமையால் தேசிய மக்கள் சக்தியினரால் மூன்று ஆசனங்களை பெற முடிந்ததே உண்மையான விடயம்.

வடகிழக்கில் தேசிய மக்கள் சக்தியினரை தமிழ் மக்களை நம்ப மாட்டார்கள் என்பது நன்கு தெரிந்த நிலையில், வடகிழக்கில் உள்ள ஊழல் அதிகாரிகளை அவர்களின் கோப்புக்களை விசாரணைக்கு எடுக்கப் போகிறோம் என அச்சுறுத்தி தமது அரசியல் செயல்பாடுகளை செய்து வருகிறார்கள்.

வட மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றத்தில் பல முறை கேடுகள் இடம் பெற்ற மை ஆதாரத்துடன் வெளிவந்த நிலையில் அதனை மூடி மறைத்து வலுக்கட்டாயமாக ஆசிரியர் இட மாற்றங்களை மேற்கொள்வதற்கு இங்கு உள்ள ஊழல் அதிகாரிகளை பயன்படுத்துகிறார்கள்.

அநுர ஆட்சியில் ஊழல் அதிகாரிகளை மிரட்டி வேலை வாங்குவதே திட்டம் - கஜேந்திரகுமார் திட்டவட்டம் | Corruption Continues Under Anura S Rule

ஒரு ஆசிரியர் தனது ஆசிரியர் சேவையில் ஏற்கனவே இடர்பாடுகள் நிறைந்த பிரதேசம் ஒன்றில் சேவையாற்றிவிட்டு தனக்கு விரும்பிய இடத்தில் பணி இடமாற்றம் பெற்ற போதும் அவர்களை மீண்டும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்புகிறார்கள்.

அதுமட்டுமல்லாது, யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச சபை ஒன்றில் தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் தமது பதவி விலகிய நிலையில் அவர்களுக்கான அதில் உறுப்பினர்களை இதுவரை நியமிக்க தேர்தல் ஆணையம் கடிதம் தர மறுக்கிறது.

இனவாதமே முக்கிய நோக்கம்

குறித்த உறுப்பினர்களுக்கான பதில் உறுப்பினர்களை நியமிப்பதற்கு எந்தவொரு நீதிமன்றமும் தடை ஏற்படுத்தவில்லை, இவ்வாறான ஒரு நிலையில் யார் தடுப்பது இதற்கு பின்னால் ஊழல் அதிகாரிகள் செயற்படுகிறார்கள்.

வடக்கில் தமிழ் மக்கள் சார்ந்த சபை ஒன்று திறம்பட இயங்கக்கூடாது என்ற ஜேவிபியின் இனவாத சிந்தனை தான் இதற்குப் பிரதான காரணம்.

அநுர ஆட்சியில் ஊழல் அதிகாரிகளை மிரட்டி வேலை வாங்குவதே திட்டம் - கஜேந்திரகுமார் திட்டவட்டம் | Corruption Continues Under Anura S Rule

தெற்கில் இடம் பெறும் நிலைமைகள் வேறு வட கிழக்கில் இடம்பெறும் நிலைமைகள் வேறு இதனை தமிழ் மக்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆகவே தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் வடகிழக்கில் உள்ள ஊழல் அதிகாரிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தாமல் தம் வசம் வைத்துக் கொண்டு நிர்வாக விடயங்களை குழப்புவதும் பழி வாங்குவதுமே இந்த அரசாங்கத்தின் நோக்கம் என்றார்.  

வலுவிழந்து வரும் தாழமுக்கம்! வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வலுவிழந்து வரும் தாழமுக்கம்! வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மற்றுமொரு பாரிய ஊழல்! மகிந்தவை அடுத்து வலையில் கோட்டாபய : சிக்கப்போகும் பெரும் புள்ளி...

மற்றுமொரு பாரிய ஊழல்! மகிந்தவை அடுத்து வலையில் கோட்டாபய : சிக்கப்போகும் பெரும் புள்ளி...

மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US