விமான கொள்முதலில் ஊழல்! வாக்குமூலம் வழங்கிய இரகசிய சாட்சியாளி
கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்த ஏர்பஸ் விமான கொள்முதல் பரிவர்த்தனை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒரு இரகசிய சாட்சியாளி ஒருவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
குறித்த வழக்கானது நேற்று முன்தினம் (20.01.2025) இடம்பெற்றுள்ளது.
கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் சிறப்பு சாட்சிய விசாரணை சுமார் ஒரு மணி நேரம் பத்து நிமிடங்கள் நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இரகசிய சாட்சியாளியை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை
குற்றப் புலனாய்வுத் துறையின் வேண்டுகோளின் பேரில் இரகசிய சாட்சியிடம் விசாரணை நடத்தப்பட்டு, பிற்பகல் 1.50 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பின்னணியில் உள்ள முக்கிய குற்றச்சாட்டான, 6 ஏர்பஸ் ஏ-330 விமானங்கள் மற்றும் 8 ஏ-350 விமானங்களின் கொள்முதல் பரிவர்த்தனையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணைகளின்படி, இந்த பரிவர்த்தனை தொடர்பாக இரண்டு மில்லியன் சிங்கப்பூர் டொலர் தரகுப்பணம் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறைக்கு, சட்டமா அதிபரால், டிசம்பர் 27, 2013 அன்று வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, ஏர்பஸின் தாய் நிறுவனம், சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வரவு வைத்துள்ளது.
யாருமே நெருங்க முடியாத ஈரானின் நிலக்கீழ் தளங்கள்: தகர்க்க விரும்பும் அமெரிக்காவின் அதிரடித் திட்டங்கள்!!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
அதில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி நியோமாலி விஜேநாயக்க ஒரு இயக்குநராக இருந்ததாக கூறப்படுகிறது.
இதன்படி விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டதினபடி, குறித்த பணம் பின்னர் கபில சந்திரசேனவின் அவுஸ்திரேலியாவில் உள்ள வங்கிக் கணக்கிற்கு நான்கு சந்தர்ப்பங்களில் மாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் முன்னதாக. இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க இருவரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |