வாசுதேவ மற்றும் விக்னேஷ்வரனுக்கும் இடையில் தொடர்பு உள்ளது: சாணக்கியன்

Shanakiyan Rasamanickam Sri Lanka Politician Vasudeva Nanayakkara Sri Lanka Podujana Peramuna
By Kumar Feb 24, 2023 01:31 PM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவவிற்கும், சி.வி.விக்னேஷ்வரனுக்கும் இடையில் தொடர்பு உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23.02.2023) அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் விஜயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு பாரிய பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ள பின்னணியில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கனவு உலகத்தில் இருக்கிறார்களா என்று என்ன தோன்றுகிறது.

வாசுதேவ மற்றும் விக்னேஷ்வரனுக்கும் இடையில் தொடர்பு உள்ளது: சாணக்கியன் | Correspondence Vasudeva And Vikineswaran Sanakyan

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என குறிப்பிடும் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் தேவையற்ற செலவுகளுக்கு நிதி செலவு செய்வதை அவதானிக்க முடிகிறது.

நாட்டு மக்களிடம் காணப்படும் பிரச்சினைகளும் அரசாங்கத்திடம் காணப்படும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. நாட்டு மக்கள் யாரும் தேசிய சுதந்திர தினத்தை நடத்துமாறு கோரவில்லை. ஜனாதிபதி கண்டியில் வெகுவிமர்சையான பெரஹராவை நடத்துகிறார். ஆனால் நாட்டு மக்கள் அதில் கலந்துக் கொள்ளவில்லை.

ஜனாதிபதி எவ்வாறான மனநிலையில் உள்ளார் என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றி அனைத்து விடயங்களையும் கேலிக்கூத்தாக்கியுள்ளார்.

வாசுதேவ மற்றும் விக்னேஷ்வரனுக்கும் இடையில் தொடர்பு உள்ளது: சாணக்கியன் | Correspondence Vasudeva And Vikineswaran Sanakyan

பொருளாதார நெருக்கயில் இருந்து மீண்டதன் பின்னர் தேர்தலை நடத்துவதாக இருந்தால் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை எவராலும் குறிப்பிட முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது.

அரசாங்கத்திற்கு எதிராக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த நாட்டு மக்களுக்கு ஜனநாயக முறைக்கு அமைய இடமளிக்காவிட்டால் ஜனநாயகத்திற்கு எதிரான வழியில் மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள்.

மக்கள் தமது நிலைப்பாட்டை போராட்டத்தின் ஊடாக வெளிப்படுத்தும் போது இராணுவத்தை களமிறக்கி நாட்டில் அமைதியற்ற தன்மையை தோற்றுவித்து தேர்தலை முழுமையாக பிற்போடும் நோக்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.

அரசியலமைப்பு

பொருளாதாரம் மற்றும் அரசியலமைப்பு என்பது வேறுப்பட்டது என்பதை முதலில் ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். தமது தேவைக்கு அமைய ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் மாற்றியமைத்துக் கொள்ள முடியாது.

நாட்டு மக்களின் விருப்பத்திற்கு முரணாக பலவந்தமான முறையில் ஆட்சியில் இருக்க ஜனாதிபதியும், அரசாங்கமும் முயற்சிக்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாக வேண்டும்.

வாசுதேவ மற்றும் விக்னேஷ்வரனுக்கும் இடையில் தொடர்பு உள்ளது: சாணக்கியன் | Correspondence Vasudeva And Vikineswaran Sanakyan

அதற்கு நாட்டு மக்களின் விருப்பத்துடனான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும். ஆகவே நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் வருகை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டு வந்தவர் மற்றும் அதனை முன்மொழிந்தவர் தொடர்பில் நாட்டு மக்கள் நன்கு அறிந்துக் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் இவர்கள் தான் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவித்து அதனூடாக அரசியல் செய்தார்கள். இவர்கள் தான் கடந்த காலங்களில் முஸ்லிம் அடிப்படைவாதம் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக கடும் பிரசாரங்களை முன்னெடுத்தார்கள்.

இவ்விரு காரணிகளும் தோல்வியடைந்தால் இவர்கள் தற்போது வெளிநாட்டு சூழ்ச்சி என்ற விடயத்தை கையில் எடுத்துள்ளார்கள். தேர்தல் செய்ய ஏதும் இல்லாத காரணத்தால் தற்போது அமெரிக்க முதனிலை பாதுகாப்பு அதிகாரிகளை பற்றிக் கொண்டுள்ளார்கள்.

இந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவவிற்கும், சி.வி.விக்கினேஷ்வரனுக்கும் இடையில் தொடர்பு உள்ளது. விமல் அணியினர் 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக பேசும் போது சி.வி.விக்கினேஷ்வரனும் சிங்கள ஊடகங்களுக்கு அவ்வாறான தொனியில் கருத்துக்களை முன்வைத்தார்.

ஆகவே இவ்விரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுகிறார்களா என்ற சந்தேகம் காணப்படுகிறது. உண்மையில் இவர்களுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை காணப்படுமாயின் இவர்கள் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை கொண்டு வந்திருக்க வேண்டும்.

வாசுதேவ மற்றும் விக்னேஷ்வரனுக்கும் இடையில் தொடர்பு உள்ளது: சாணக்கியன் | Correspondence Vasudeva And Vikineswaran Sanakyan

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் நாட்டில் இல்லாத போது சட்டத்திற்கு முரனான வகையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரை செய்த அளவிற்கு மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. முறையற்ற வகையில் மின்கட்டணம் 66 சதவீதத்தால் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே மின்மானி வாசிப்பாளர்கள் மின்கட்டணத்தை நிர்ணயிக்க செல்லும் போது சட்டத்திற்கு முரணாக செயற்படுத்தப்பட்டுள்ள ஒரு தீர்மானத்தை தாம் செயற்படுத்துகிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US