நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள்
உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்த இன்னும் ஒரு மாதம் ஆகும் என நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான திருத்தங்களை பொது பாதுகாப்பு அமைச்சகம் சமர்ப்பிக்க உள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் இந்த திருத்தத்தை முன்வைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
முன்மொழியப்பட்ட புதிய திருத்தங்கள்
பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் 30க்கும் மேற்பட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்தார்.
சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் புதிய திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
சமீப நாட்களில், இந்த சட்டம் பல தரப்பினரால் விமர்சிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
