யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் படகு திருத்தப்பணிகள் (photos)
யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் குமுதினி படகினை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சென்று பார்வையிட்டுள்ளார்.
நெடுந்தீவுக்கான பயணிகள் போக்கு வரத்துச் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் கடந்த 06 மாதங்களுக்கு மேலாக மாவிலித்துறையில் தரித்திருந்ததுடன் திருத்தப்பணிகளுக்காக வல்வெட்டித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்துடன் நீண்ட காலமாக திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு மற்றும் வட தாரகை படகு என்பன நெடுந்தீவுக்கான பயணிகள் போக்கு வரத்து சேவையில் ஈடுபட்டு வந்துள்ளது.
குறித்த குமுதினி படகு பழுதடைந்ததையடுத்து வடதாரகை படகு மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் நெடுந்தீவுக்கான போக்கு வரத்தில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
திருத்த பணிகள் முன்னெடுப்பு
இந்த நிலையில் திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் குமுதினி படகின் திருத்தப்பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நெடுந்தீவு ஓய்வு நிலை அதிபர் வரதன் மற்றும் நெடுந்தீவைச் சேர்ந்த கட்சியின் செயற்பாட்டாளர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மேலும், அதன் நிலமைகள் தொடர்பில்
கேட்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
