இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு
தியத்தலாவ பகுதியிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கஹகொல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் வானடியத்தலாவ - கஹகொல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை
உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில், வீட்டில் கணவர் மற்றும் பிள்ளைகள் இல்லாத சமயத்தில் இவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தியத்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



