வவுனியாவில் மேலும் 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: இருவர் மரணம்
வவுனியாவில் மேலும் 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று மதியம் (12.10) வெளியாகின.
அதில் வவுனியா மாவட்டத்தின் நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மேலும் 25 பேருக்கு மேலும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், கோவிட் தொற்று காரணமாக குருமன்காடு பகுதியைச் சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவரும், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய பெண் ஒருவரும் என இருவர் மரணமடைந்துள்ளனர்.
மரணித்தவர்களின் சடலங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri