கோவிட் தொற்று முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும்! - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கோவிட் - 19 வைரஸ் தொற்று முடிவுக்கு வருவதற்கு நீண்ட காலம் ஆகலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2019ம் ஆண்டு இறுதி பகுதியில் சீனாவில் கோவிட் - 19 தொற்று கண்டறியப்பட்டது, உலகம் முழுவதும் கோவிட் - 19 வைரஸ் பாதிப்பு ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது.
தற்போது பல்வேறு நாடுகளில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் கோவிட் - 19 மரணங்கள் அதிகரித்து வருகின்றது. அத்துடன், மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோவிட் - 19 வைரஸ் தொற்று முடிவுக்கு வருவதற்கு நீண்ட காலம் ஆகலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதாளோம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கோவிட் - 19 பாதிப்பு அதிகரிப்பால் பல்வேறு நாடுகளில் வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வழிகின்றன. பல நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக தொடர்ந்து பரவி வருகிறது.
இளம் வயதினர் தங்களுக்கு தொற்று வராது என்று நம்புகின்றனர். ஆனால் அது தவறானது. கோவிட் 19 பரவல் குறித்து பல்வேறு குழப்பங்கள், சிகிச்சையில் உள்ள சிக்கல்களால் வைரஸ் முடிவுக்கு வர நீண்டகாலம் ஆகும்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என்பது நமக்கு தெரியவந்துள்ள உண்மை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri