கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம்: ஆறு மருத்துவமனைகளில் ஆரம்பம்
கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம் கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள ஆறு மருத்துவமனைகளில் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறு மருத்துவமனைகளின் பணியாளர்கள் மத்தியில் தடுப்பூசி திட்டம் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனை, கல்போவிலயில் உள்ள கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனை, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்கள், ராகம ஹோமாகம அடிப்படை மருத்துவமனை, முல்லேரியாவில் உள்ள கொழும்பு கிழக்கு அடிப்படை மருத்துவமனை மற்றும் அங்கொடயில் உள்ள தொற்று நோய் மருத்துவமனை ஆகியவற்றின் பணியாளர்கள் ஆகியோர் மத்தியிலேயே இந்த திட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.
இந்த மருத்துவமனைகளில் சுமார் 25 சதவீத பணியாளர்களுக்கு ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
மீதமுள்ள ஊழியர்களுக்கு அடுத்த சில நாட்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri