சிங்கப்பூரில் அதிகரிக்கும் கோவிட் தொற்று பரவல்: முக கவசம் அணிய மக்களிடம் கோரிக்கை
கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் சிங்கப்பூர் அரசு மக்களை பொது இடங்களில் முக கவசம் அணியும் படி கேட்டுக்கொண்டுள்ளது.
சிங்கப்பூரில் கோவிட் தொற்று பாதிப்பால் ஒரு நாளில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 225 இல் இருந்து 350 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொது இடங்களில் முக கவசம்
சிங்கப்பூரில், 'புளூ' எனப்படும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அங்கு கோவிட் தொற்று பாதிப்பும் கடந்த சில வாரங்களில் அதிகரித்து வருகிறது.
கோவிட் தொற்று பாதிப்பால் ஒரு நாளில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 225இல் இருந்து 350ஆக உயர்ந்துள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நான்கில் இருந்து ஒன்பதாக உயர்ந்துள்ளது.
இதனால் சிங்கப்பூர் அரசு அந்நாட்டு மக்களை பொது இடங்களில் முக கவசம் அணியும்படி கேட்டுக்கொண்டுள்ளது.