இலங்கையில் கோவிட் வைரஸ் காற்றில் பரவுகிறது! மக்களிற்கு முக்கிய தகவல்
கோவிட் வைரஸ் ஏனைய நாடுகளைப்போன்று இலங்கையிலும் காற்றினால் பரவும் நோயாக மாறியுள்ளது.
இலங்கையின் சுகாதார அமைச்சு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதன்காரணமாக நாட்டில் விரைவாக நோய்த்தொற்றுகள் பரவக்கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
நோயாளிகளிடமிருந்து வைரஸ் காற்றில் பரவக்கூடும் குறிப்பாக காற்றோட்டம் மோசமாக இருக்கும்போது இதற்கான வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
உலகின் மிக பிரசித்தமான மருத்துவ இதழான 'தெ லான்செட்' வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், உலக பொது சுகாதார சமூகம் அதற்கேற்ப செயற்பட வேண்டும் என்று கோரியுள்ளது. பிற காரணிகளும் கோவிட்டுக்கு வழிவகுக்கின்றன.
எனினும் காற்றின் ஊடாக கோவிட் தொற்று ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என உலக சுகாதார சமூகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் உள்ளிட்ட நாடுகளில் கோவிட் விரைவாக பரவுவதைத் தடுக்க கடுமையான வழிகாட்டுதல்கள் விதிக்க வேண்டும். தலா இரண்டு முகமூடிகளை அணிவது உட்பட சுகாதார வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக செயற்படுத்தப்பட வேண்டும்.
அதே நேரத்தில் கைகளை கழுவுதல் மற்றும் சமூக தூரத்தை பராமரித்தல் போன்ற பிற
வழிகாட்டுதல்கள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார சமூகம்
கோரியுள்ளது.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri