திருமலையில் மேலும் தனியார் வங்கி ஊழியரொருவருக்கு கொரோனா
தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட திஸ்ஸபுர பகுதியில் 24 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் இன்று மாலை இத்தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.
திருகோணமலை நகரில் தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றி வந்த 24 வயதுடைய இளைஞனுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதே உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை திருகோணமலை நகர் பகுதியில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்வோர்களை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கைது செய்யப்படும் நபர்களுக்கு கட்டாயம் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
