அதிகளவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகும் வைத்தியர்கள்
நுவரெலியா வைத்தியசாலையின் மூன்று மருத்துவர்கள் உள்ளிட்ட 23 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
3 மருத்துவர்கள், 13 தாதியர், 7 சிற்றூழியர்கள் இவ்வாறு கோவிட் பெருந்தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
நோய்த் தொற்றுக்கு இலக்கான மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சிலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏனையவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே நுவரெலியா வைத்தியசாலையில் பணியாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாகவும் தற்பொழுது கொரோனா தொற்றினால் சில பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் நிலைமைகளை நெருக்கடியாக்கும் எனவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையின் மருத்துவர்கள் அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan