நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
நாளையும் நாளை மறுதினமும் நாடாளுமன்றத்தில் உள்ள சகல ஊழியர்களுக்கும் உடனடியாக ரெபீட் என்டிஜன் பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரின் அரசியல் விவகாரம் தொடர்பான ஒருங்கிணைப்புச் செயலாளர் குமாரசிறி ஹெட்டிகே ஆகியோர் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குமாரசிறி ஹெட்டிகே கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளதுடன் அங்கு சில பிரிவுளுக்கு சென்றுள்ளார்.
அதேவேளை ரவூப் ஹக்கீமுக்கு நெருக்கமான 15 இணைப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு PCR பரிசோதனை நடத்தவும் தனிமைப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.