இலங்கையில் இளம் வயதினரை இலக்கு வைக்கும் கோவிட் -19! ஜயசுமன தகவல்
இலங்கையில் இளம் வயதினருக்குக் கோவிட் -19 வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஊடகங்களிடம் தெரிவித்தார்.
நாட்டில் தினசரி கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார்.
எனினும், தற்போதைய சூழ்நிலையில், மாறுபாட்டுக்கு உள்ளான கோவிட் -19 தொற்று நாட்டுக்குள் பரவியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும், வார இறுதியில் வெளியிடப்படும் பரிசோதனை முடிவுகளைக் கொண்டே அதனைக் கூறமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam