இலங்கையில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இல்லை! எம்.பாலசூரிய முக்கிய தகவல்
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையானது தற்போது கட்டுப்பாட்டில் இல்லை என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவுகையானது தற்போது நிர்வகிக்க முடியாத சூழ்நிலையை எட்டியுள்ளது என்றும் பொது சுகாதார சங்க செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.
பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள், பல்வேறு பாடசாலைகளில் உள்ள மாணவர்கள், காவல்துறை ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன், நத்தார் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களில் பயண நகர்வுகளை எளிதாக்கியதும் கொரோனா பரவலை அதிகரிப்பதற்கு பங்களித்துள்ளது.
குறித்த காலகட்டத்தில் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறிய மக்களால் பிற மாகாணங்களுக்கு வைரஸ் பரவியுள்ளது.
நாட்டில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக கடைப்பிடிப்பதே ஆகும்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவரை கண்டறிவதை தொடர்ந்து அரசாங்கம் முடிந்தவரை பல பகுதிகளை தனிமைப்படுத்த வேண்டும்.
துல்லியம் இல்லாததால் சுகாதார அதிகாரிகள் விரைவான என்டிஜன் சோதனைகளை மட்டுமே நம்பக்கூடாது.
கொரோனா நோயாளிகளைக் கண்டறிய அதிக பி.சி.ஆர் சோதனைகளை நடத்த அரசாங்கம் ஒரு பொறிமுறையை செயல்படுத்த வேண்டும்.
கொரோனா வைரஸின் முதல் அலையின் போது பொதுமக்கள் மிகவும் கவனமாக செயற்பட்டனர்.
எனினும் இரண்டாவது அலையின் போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர்கள் புறக்கணித்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri