பிரித்தானியாவை ஆட்டிப் படைக்கும் கோவிட் தொற்று! ஒரே நாளில் உச்சம் தொட்ட பாதிப்பு
பிரித்தானியாவில் கோவிட் பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக அங்கு கோவிட் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
உலக அளவில் கோவிட் வைரஸ் தொற்று பாதிப்பில் பிரித்தானியா தற்போது 4வது இடத்தில் நீடித்து வருகிறது.
பிரித்தானியாவில் கடந்த ஒரு வாரமாக 50 ஆயிரம் முதல் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கோவிட் தொற்று உறுதியானது.
இந்நிலையில், நேற்றும் பிரித்தானியாவில் 90,629 பேர் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு கோவிட் தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
கோவிட் தொற்று பாதிப்பால் 172 பேர் இறந்துள்ளனர். இதனால் பிரித்தானியாவில் இதுவரை கோவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 433 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 99 லட்சத்தை நெருங்கியுள்ளது. தற்போது 15 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri